புதுக்கோட்டை

ஆலங்குடியில் சுமார் 1 மணிநேரம் கனமழை

DIN

ஆலங்குடியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 
 ஆலங்குடி வட்டத்தில் ஆற்றுப்பாசனம் ஏதும் கிடையாது என்பதால் ஆழ்குழாய் கிணறை நம்பியே விவசாயம்  நடைபெற்று வருகிறது. 
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலுக்கு பிறகு சுத்தமாக மழை பெய்யவில்லை. இதனால்  குளங்கள், ஏரிகள் வறண்டு காணப்பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில், ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து, வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

SCROLL FOR NEXT