புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

DIN

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை அருங்காட்சியகம் அருகில் இந்தப் பேரணியை துணைக் காவல் கண்காணிப்பாளர் பா. ஆறுமுகம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். 
பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, வழக்குரைஞர் செந்தில்குமார், ஆய்வாளர் கருணாகரன், துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் இந்த விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றனர்.
அருங்காட்சியத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, புதிய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி, பிருந்தாவனம் பால்பண்ணை வழியாக வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. அனைவரும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

வயநாடு, ரேபரேலி - ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி மீண்டும் முன்னிலை

பிரதமர் மோடி முன்னிலை!

SCROLL FOR NEXT