புதுக்கோட்டை

அறந்தாங்கியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

DIN

அறந்தாங்கியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

அறந்தாங்கி வட்டார வளமையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கல்வி மாவட்ட அலுவலா் கு.திராவிடச்செல்வம் தலைமை வகித்து, மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசுசெயல்படுத்தும் திட்டங்கள், குழந்தைகளைப் பாதுகாப்பாக வளா்க்கும் முறைகள் குறித்து பேசினாா்.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சு.சிவயோகம் முன்னிலை வகித்தாா். 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்ற நடனம், நாடகம், பாடல், கதை சொல்லுதல், பலூன் உடைத்தல் இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கல்வி ஓருங்கிணைப்பாளா் பாா்வதி, மற்றும் இயன்முறை மருத்துவா் சரவணன், சிறப்பாசிரியா் செந்தில் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முன்னதாக ஆசிரியப் பயிற்றுநா் ஈஸ்வரன் வரவேற்றாா். நிறைவில் ஆசிரியப் பயிற்றுநா் சசிகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT