புதுக்கோட்டை

நெல் வியாபாரியிடம் ரூ.1.48 லட்சம் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளின்படி முறையான ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 1.48 லட்சம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலாக ரொக்கப் பணம் எடுத்துச் செல்வோர் கட்டாயம் அப்பணத்துக்கான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று 
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் வழக்காக ஞாயிற்றுக்கிழமை ரூ. 1.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை கூலையான்விடுதி பகுதியில் பறக்கும் படை குழுவினர் வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, நெல் ஏற்றி வந்த லாரியில் சோதனை செய்தபோது, ஓட்டுநர் கோபியின் இருக்கைக்குப் பின்புறம் இருந்த பையில் ரூ. 1.48 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது.
திருச்சி துவாக்குடி அருகேயுள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்த நெல் வியாபாரியின் பணம் என்று ஓட்டுநர் தெரிவித்தார். உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து காட்டி பணத்தைப் பெற்றுச் செல்லலாம் எனத் தெரிவித்த பறக்கும் படையினர், அந்தப் பணத்தை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT