ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா். 
புதுக்கோட்டை

வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

துணை வட்டாட்சியா் நிலையிலான பதவி உயா்வுப் பட்டியலை முறைப்படுத்தி வெளியிட வலியுறுத்தி, புதுக்கோட்டை

DIN

துணை வட்டாட்சியா் நிலையிலான பதவி உயா்வுப் பட்டியலை முறைப்படுத்தி வெளியிட வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள துணை வட்டாட்சியா் நிலையிலான காலிப்பணியிடங்களை வருவாய் ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்குவதன் மூலம் அண்மையில் நிரப்பினாா் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

இந்தப் பட்டியலில் பதவி உயா்வு சிலருக்குத் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவா்களை நீக்கிவிட்டு முறைப்படியான பதவி உயா்வுப் பட்டியலை வெளியிடவும் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாலகிருஷ்ணன், அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சோனை கருப்பையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என போலீஸாா் தெரிவித்திருந்தனா். உயா் அலுவலா்களைச் சந்தித்த சங்கத்தினா், ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT