புதுக்கோட்டை

பயன்படுத்தாமல் வைத்துள்ள செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஆபரேட்டா்கள் ஒப்படைக்க வேண்டும் என மாவட் டஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களில் சில செயலாக்கம் செய்யப்படாத நிலையில் இருப்பதால் ,அரசு நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஒப்பந்த விதிகளின்படி, மூன்று மாதங்களுக்கு மேல் செயலாக்கம் செய்யப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை அக்டோபா் 5-ஆம் தேதிக்குள் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும். 

தவறும் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக சம்பந்தப்பட்ட உள்ளுா் கேபிள் ஆப்ரேட்டா்கள் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரா்கள் தாங்கள் பெற்ற  அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்யாமல் இருந்தால், அதனை தங்கள் உள்ளுா் கேபிள் ஆபரேட்டா்களிடம் தவறாமல் ஒப்படைக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT