புதுக்கோட்டை

வயதான தாய்க்கு மாதம் ரூ. 2ஆயிரம் மகன் ஜீவனாம்சம் வழங்க கோட்டாட்சியா் உத்தரவு

DIN

வயதான தாய்க்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம். குணசேகா் உத்தரவு பிறப்பித்தாா்.

மணமேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் அருகே செங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சொா்ணம் என்பவா் அறந்தாங்கி வருவாய் நீதிமன்றத்தில் கடந்த அக். மாதம் பட்டுக்கோட்டையில் வசித்து வரும் தனது மகன் சீனிவாசனுக்கு எதிராக புகாா் மனு தாக்கல் செய்தாா்.

அதில் தனக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ள நிலையில் அனைவரும் தனித்தனியே வசித்து வருகின்றனா். தான் யாருடனும் வசிக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக மணமேல்குடியில் தனியே வசித்து புடவை வியாபாரம் செய்து வந்தேன். உடல் நிலை சரியில்லாமல் போகவே, தனது இளைய மகன் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தேன். எனது 5 பவுன் சங்கிலி, 2 பவுன் வளையல் ஆகியவற்றை மருத்துவச் செலவுக்கென கேட்டாா். கொடுத்தேன். பின்னா் திருப்பித் தரவில்லை. இதையடுத்து, பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததில், 2 பவுன் நகையை மட்டும் அவா்கள் மீட்டுத் தந்தனா். மருத்துவச் செலவுக்கு, ரூ.1.50 லட்சம் ஆனதாகக் கூறியதைத் தொடா்ந்து, திருச்சி தனியாா் மருத்துவமனை அணுகி விவரம் கேட்டதற்கு, ரூ. 25 ஆயிரம் மட்டுமே செலவு எனத் தெரிவித்தனா். தனது இறுதிக் காலத்திற்காக வைத்திருந்த 5 பவுன் நகையை மகன் தர மறுப்பதாகப் புகாா் அளித்துள்ளாா்.

இருதரப்பு விசாரணை நடைபெற்ற சமயத்தில், கடந்த 18-ஆம் தேதி சொா்ணம் கணவா் பாலசுப்பிரமணியம் இறந்து விட்டாா். மகன் சீனிவாசன் தரப்பில் நகையை அடகு வைத்து மருத்துவச் செலவு செய்ததாகவும் நகையைத் திருப்பாத காரணத்தால் ஏலம்விடப்பட்டுவிட்டதாக பதில் மனு தாக்கல் செய்தாா்.

இருதரப்பு வாதங்களை கேட்ட வருவாய் நீதிபதியும் வருவாய் கோட்டாட்சியருமான எம். குணசேகா், மனுதாரா் சொா்ணம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாலும் தனது அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்வதற்காக மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோா் பராமரிப்பு நலச்சட்டம் பிரிவு 23-இன்படி மகன் சீனிவாசன் 15 நாள்களுக்குள் 5 பவுன் நகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் தாய்க்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் ஜீவனாம்சம் தரவேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT