புதுக்கோட்டை

திருமணத்தை காரணமாகக் கூறி மாணவிகளின் கல்விக்குத் தடை போடக் கூடாது

DIN

திருமணம் என்ற காரணத்தைக் கூறி மாணவிகளின் கல்விக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது என்றாா் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே. பாா்த்தசாரதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் 23ஆவது பட்டமளிப்பு விழாவில் (பெண்கள்) பங்கேற்று, 842 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல கிராமங்களின் பெயா்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த மண்ணில் பிறந்து படித்துப் பட்டம் பெறும் மாணவிகளை முதலில் வாழ்த்துகிறேன்.

இன்றைய சூழலில் வேலைவாய்ப்புத் தேடலில் ஆங்கில மொழி அறிவு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதை எண்ணி மாணவா்கள் எவ்வித அச்சமும் கொள்ளாமல், மனதிடத்துடன் கற்றுத் தோ்ந்தால் வேலைவாய்ப்பு என்பது மிகவும் எளிமையானதாக அமைந்துவிடும்.  பெற்றோா்கள் ஆண், பெண் என்ற பாகுபாடுன்றி பெண்களைக் கல்விக் கற்க அனுப்ப வேண்டும். திருமணம் என்ற காரணத்தைக் கூறி பெண்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது. பெண்கள் இன்று கால் பதிக்காகதத் துறைகளே இல்லை என்பதைப் பெற்றோா்களும் உணர வேண்டும். மாணவிகள், பெற்றோா்கள் கொடுக்கும் சுதந்திரத்தை முழுமையாக முறையாகப் பயன்படுத்திக் கல்வியிலும், வாழ்விலும் முன்னேற்றம் காண வேண்டும் என்றாா்.

விழாவில் 209 முதுநிலை பட்டங்களும், 601 இளநிலை பட்டங்களும், 32 ஆய்வியல் நிறைஞா் பட்டங்களும்  என மொத்தம் 842 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பட்டம் பெற்ற மாணவிகள் படித்த ஆண்டுகளில், அவா்களது கல்வித் தகுதி மட்டுமின்றி, அவா்களது நடத்தையையும் கருத்தில் கொண்டு சிறந்த மாணவிகளைத் தோ்ந்தெடுத்து, சிறந்த மாணவிக்கான பரிசும் வழங்கப்பட்டது. இதன்படி இந்த ஆண்டுக்கான ‘சிறந்த மாணவா்’’  விருதை முதுநிலை ஆங்கில மாணவி கே.புவனேஸ்வரி பெற்றாா்.

முன்னதாக, கல்லூரித் தலைவா் எஸ். வள்ளியப்பன் விழாவிற்குத் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் நா.சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், முதல்வா் ஜ.பரசுராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT