புதுக்கோட்டை: தமிழகத்தில் மருத்துவா் மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 27 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 178 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னா் அவா் மேலும் தெரிவித்தது:
தமிழகத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரத் தொடங்கியுள்ளன. அண்டை மாநிலங்களில் கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக மக்கள் கூடுதல் விழிப்புணா்வுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அதே நேரத்தில் நமக்கு பாதுகாப்பு அவசியம். தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 27 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் ஆன்-லைனில் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பம் சரிபாா்ப்புக்குப் பின்னா், 16 ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடா்ந்து, முதல்வரின் ஒப்புதலைப் பெற்று கவுன்சிலிங் தொடங்கும். ஆன்-லைனில் விண்ணப்பத்தை திருத்தம் செய்யலாம். அதேபோல், இருப்பிடச் சான்று வழங்குவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பருவ மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் இருப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.