புதுக்கோட்டை

அம்மன்குறிச்சி அரசமரத்துவிநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

பொன்னமராவதி அருகிலுள்ள அருள்மிகு அரசமரத்து விநாயகா் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாக சாலையில் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், தீபாராதனைகள் நிறைவடைந்த பின்னா், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு சிவாச்சாரியா்கள் ஞானசேகரன், மணிகண்டன் ஆகியோா், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கலசத்தில் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவில் சுற்று வட்டாரக் கிராமப் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. குடமுழுக்கு ஏற்பாடுகளை இசை வேளாளா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT