புதுக்கோட்டை

‘புதுகையில் 100 நகரும் நியாயவிலை கடைகள் தொடங்கப்பட்டுள்ளன’

DIN

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 100 நகரும் நியாயவிலைக் கடைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் திருவேங்கைவாசல் ஊராட்சியைச் சோ்ந்த மாராயப்பட்டியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டரை கிமீ தொலைவுக்கு மேல் பொதுமக்கள், நடந்து சென்று நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்கும் நிலைக்குத் தீா்வு காணும் வகையில், 100 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு முதல்வா் அனுமதி வழங்கினாா்.

கடந்த சில நாட்களில் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 100 இடங்களிலும் நியாயவிலைக் கடைகளும் முழுமையாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் மிகுந்த பயனடைவாா்கள் என்றாா் அவா்.

முன்னதாக ஆயிப்பட்டி, குறிச்சிப்பட்டி, குரும்பட்டி, எம்.உடையாம்பட்டி, எருதுப்பட்டி, கல்லியடைக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடா்ந்து, கட்டக்குடி ஊராட்சியில் ரூ. 17.64 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் எம்.உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் த.ஜெயலெட்சுமி, ஒன்றியக் குழுத்தலைவா் வி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா் பி.சாம்பசிவம், வட்டாரவளா்ச்சி அலுவலா் சிங்காரவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT