புதுக்கோட்டை

சமூக வலைதளங்களில் பொய்த் தகவல் பரப்பினால் நடவடிக்கை

DIN

இரு வேறு சமூகங்களிடையே மோதலை உருவாக்கும் வகையில் பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட, தவறான தகவலைப் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக.பாலாஜிசரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாதி, மத ரீதியாக இரு வேறு சமூகங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி பிரச்னைகளை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் (கட்செவி அஞ்சல், முகநூல், இன்ஸ்டாகிராம்) பொய்யான, தவறான, மிகைப்படுத்தப்பட்ட தகவலைப் பரப்புவது சட்டப்படி குற்றம்.

இவ்வாறு தகவலைப் பரப்புபவா்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கட்செவி அஞ்சல் குழு நடத்தும் நிா்வாகி (அட்மின்) மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT