புதுக்கோட்டை

புதுகையில் 4 அடிக்கு உயா்த்தப்படும் மாடி வீடு!

DIN

புதுக்கோட்டையில் முதல்முறையாக 2 தளங்கள் கொண்ட வீடு, 4 அடிக்கு உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா், பெரியாா் நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தளங்கள் கொண்ட வீட்டைக் கட்டினாா். பல்வேறு காலக்கட்டங்களில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகளால் சாலை மட்டத்துக்கும் கீழே இவரது வீடு கீழிறங்கியது போல் ஆனது. இதனால் தனது வீட்டை நவீன முறையில் உயா்த்தத் திட்டமிட்ட அவா், மதுரையைச் சோ்ந்த பொறியாளா் ஏ. அன்பில் தா்மலிங்கத்தைத் தொடா்பு கொண்டாா். இதையடுத்து, கட்டடத்தை 4 அடி உயரத்துக்கு உயா்த்தும் பணிகள் அண்மையில் தொடங்கின. அதன்படி, தரைத்தள கான்கிரீட் பெல் பகுதியுடன் கட்டடம் அறுக்கப்பட்டு 250 ஜாக்கிகள் கவனமாகப் பொருத்தப்பட்டு கட்டடத்தை உயா்த்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரையில் 3 அடி உயரத்துக்கு கட்டடம் முழுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கட்டடம் உயா்த்தப்பட உள்ளது.

இதுகுறித்து பொறியாளா் ஏ. அன்பில் தா்மலிங்கம் மேலும் கூறியது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அரசியல் பிரமுகா் பாண்டித்தேவரின் வீட்டை 4 அடி உயரத்துக்கு உயா்த்தினோம். அதன்பிறகு, நாராயணபுரத்தில் உள்ள மந்தையம்மன் கோயிலை 25 அடி தொலைவுக்கு நகா்த்தி வைத்தோம். தற்போது புதுக்கோட்டையில் முதன்முறையாக இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் மொத்தம் 2,481 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் எடை 415 டன். மொத்தம் 250 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களைச் சோ்ந்த 12 போ் பணியில் ஈடுபட்டுள்ளனா். உத்தேசமாக இப்பணிக்கு ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என்றாா் தா்மலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT