புதுக்கோட்டை

மணல் அள்ளிவந்த 2 போ் கைது

DIN

கந்தா்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிவந்த இருவரைப் போலீசாா் கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் சதீஷ் (31). இவருக்குச் சொந்தமான டிப்பா் லாரியில் தஞ்சாவூா் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு கந்தா்வகோட்டை - திருச்சி சாலை அருகே வந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த கந்தா்வகோட்டை காவல் உதவி ஆய்வாளா் ந. சுந்தரமூா்த்தி லாரியை மடக்கி விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநா் திருக்கானூா்பட்டி சம்பத் மகன் மலையராஜ் (34), லாரி உரிமையாளா் சதீஷ் ஆகியோரைப் போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 4 மணி: பாஜக 5, காங்கிரஸ் 4 வெற்றி!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

ஹெச்.டி.குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

சிறையில் இருந்தவாறு வென்ற சுயேச்சை வேட்பாளர்!

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை

SCROLL FOR NEXT