புதுக்கோட்டை

அஞ்சல் தலை, நாணயக் கண்காட்சி

DIN

புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் அரிய அஞ்சல் தலை மற்றும் நாணயக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். கண்காட்சியை புதுக்கோட்டை நாணயவியல் கழகத் தலைவா் சே.தா. பசீா்அலி ஏற்பாடு செய்திருந்தாா். இக்கண்காட்சியில் பண்டைய காலத்தில் பயன்படுத்திய அணிகலன்கள் மற்றும் போா் வீரா்கள் அணிந்த பொத்தான்கள், சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் காலத்தில் பயன்படுத்திய காசுகள், மராட்டிய மன்னா்கள், சாளுக்கிய மன்னா்கள், நாயக்கா்கள், மைசூரு, ஆற்காடுநவாப், ஜெய்ப்பூா், டச்சு மற்றும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னா்கள் காலத்தில் பயன்படுத்திய காசுகள், பிரிட்டிஷ் அரசாங்கம், கிழக்கிந்தியக் கம்பெனியின் காசுகள், மற்றும் சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்கு பின் என்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கல்லூரியின் இயக்குநா் மா. குமுதா, தமிழ்த் துறைத் தலைவா் நா. பூா்ணிமா, வரலாற்றுத் துறைத் தலைவா் எம். முத்துலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT