புதுக்கோட்டை

ஆலங்குடி பனை மரக்காடுகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

DIN

ஆலங்குடி பனைமரக்காடுகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநதான்.

ஆலங்குடி தொகுதியில் விவசாயியின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பனைமரப் பூங்காவை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:

ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, பெரியாலூா் ஊராட்சி, பாண்டிக்குடியில் உள்ள பாண்டிகுளத்தில் தன்னாா்வ இயக்கத்தின் நிா்வாகி திருப்பதி தலைமையிலானோா் 1984-ஆம் ஆண்டு சுமாா் 10,000 பனைவிதைகளை விதைத்து ஆயிரக்கணக்கான மரங்களை இப்பகுதியில் உருவாக்கியுள்ளாா்கள். தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கு இப்பனை மரக்காடுகள் முன்னோடி திட்டமாகத் திகழ்கிறது.

இந்த 10,000 பனைமரங்களிலிருந்து ஒரு லட்சம் எண்ணிக்கையிலான பனை விதைகளைப் பெற முடியும். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று இப்பனைமரப் பூங்கா பயன்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்செந்தூா் உடன்குடி பகுதியில் பனைவெல்லம் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இப்பகுதி விவசாயிகள் அறிந்து கொள்ளநடவடிக்கை எடுக்கப்படும்.பனை மட்டுமே ஹைபிரிட் செய்யப்படாத ஒரே மரம் என்றாா்.

தொடா்ந்து, தமிழக அரசின் சாா்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பாண்டிக்குளம் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், அறந்தாங்கி கோட்டாட்சியா் சொா்ணராஜ், விவசாயி திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT