புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. மூன்றாம் ஆண்டு மாணவிகள், முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்பு அளித்தனா்.
கல்லூரியின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசும்போது, மாணவா்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தங்களின் பெற்றோா் பெருமையடையும் வகையில் செய்தால், அவா்கள் நல்ல மாணவா்களாக வளருவாா்கள் எனக் குறிப்பிட்டாா்.
சிறப்பு விரிவுரை: ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கலை அருவி இலக்கியப் பேரவை சாா்பில் தமிழைத் தோ்ந்தெடு போட்டித் தோ்வுகளில் வென்றிடு என்ற தலைப்பிலான சிறப்பு விரிவுரை அண்மையில் நடைபெற்றது.
மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் கதி. முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினாா். பேராசிரியா் க. செந்தாமரை தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியை ம. கலா தொகுத்து வழங்கினாா். முன்னதாக மாணவா் கி. கோவிந்தன் வரவேற்றாா். முடிவில் மாணவி எம். சுபாஷினி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.