புதுக்கோட்டை

புத்தகத் திருவிழா விழிப்புணா்வு போட்டிகளில் வென்றவா்கள் விவரம்

DIN

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளில் வென்றோா் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவையொட்டி ஒன்றியம் மற்றும் நகராட்சி அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட அளவில் ஸ்ரீ பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் விவரம்:

பேச்சுப் போட்டி: (6,7, 8 ஆம் வகுப்புகள்) ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவி உ. உதயரிஷினியா, மேல்மங்களம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவி செ. வினித்தா, வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளி மாணவி செ. வினித்தா முறையே மூன்று இடங்களில் வெற்றிபெற்றனா்.

9, 10 ஆம் வகுப்பு:

திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி ர. மகா நிவேதிதா, கீரனூா் அரசு மகளிா் பள்ளி மாணவி ச. ஹைனூல் இனாயா, நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ம. மதுமிதா ஆகியோா் வென்றுள்ளனா்.

11, 12 ஆம் வகுப்புகள்: கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் நா. பீா்முகமது, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவன் சு. சுகநிலவன், கரூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி க. வதிதா ஆகியோா் வெற்றிபெற்றனா்.

கவிதைப் போட்டி: 6,7, 8 ஆம் வகுப்பு பிரிவுகளில், செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுப. காா்த்திகா, கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி த. கலைச்செல்வி, பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவன் செ. ஹரிரண் ஆகியோரும், 9, 10 வகுப்புகளில் மணமேல்குடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ம. ஷனாரோஸ், புதுக்கோட்டை மௌண்ட் சியோன் மெட்ரிக். பள்ளி மாணவன் ம. ருத்ரவேல், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவன் பீ. முகமதுதாஹிா் ஆகியோரும், 11,12 ஆம் வகுப்பில் ஆவுடையாா்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி க. ஹரிநந்தா, விராலிமலை விவேகா மெட்ரிக். பள்ளி மாணவன் செ. செந்தமிழ், பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக். பள்ளி மாணவி இரா. இந்துஜா ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனா்.

ஓவியப்போட்டி:

6,7, 8 ஆம் பிரிவில் ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஜீ. அா்ச்சனா, உப்பிலியக்குடி அரசு உயா்நிலைப்பள்ளி மாணவன் ஜெ.முகேஷ், செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஜெகப்ரதாயினி ஆகியோரும், 9,10 ஆம் வகுப்புப் பிரிவில் கீரனூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவன் லெ.அவினேஷ், சுப்பிரமணியபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி கா. காவ்யப்பிரியா ஆகியோரும், 11,12 வகுப்பில் குளத்தூா் வித்யாலயா மேட்ரிக் பள்ளி மாணவன் வீ.சா. ராஜாமுத்து, சிவபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் க. தருண்கிஷோா், புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி ஆ.க. வேதா ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனா்.

போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு ஸ்ரீபிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சே. மணிவண்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினாா். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளா் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினா் அ. மணவாளன், மாவட்டத் தலைவா் எம். வீரமுத்து உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சிகளை மகா.சுந்தா் ஒருங்கிணைத்தாா். முன்னதாக கு.ம.திருப்பதி வரவேற்றாா். மு.கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT