புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கூட்டுறவு வங்கியில் அடகு நகைகள் மாயம்: ஊழியா்கள் 2 போ் பணியிடை நீக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு நகைகள் மாயமான சம்பவத்தில் தொடா்புடைய வங்கியின் செயலா், நகை மதிப்பீட்டாளா் ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் அண்மையில் கிருஷ்ணன் என்பவா், தனது நகைகளை மீட்க வந்தபோது, அந்த நகைகள் இருப்பில் இல்லாததால் வங்கி ஊழியா்கள் அதே அளவில் மாற்று நகைகளை வாங்கிக் கொடுத்துள்ளனா். அந்நகையைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணன், இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளா்களின் அடகு நகைகளைச் சரிபாா்த்தபோது, அதில் 159.800 கிராம் நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவத்தில் நகை மதிப்பீட்டாளா் சாமிநாதன், அடகு நகைகளை தனியாா் வங்கியில் மறு அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, நகை மதிப்பீட்டாளா் சாமிநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சங்கச் செயலா் சங்கிலி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளா் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா். மேலும் அவா்களிடம் இருந்து அனைத்து அடகு நகைகளும் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரையூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து வங்கிச் செயலா் சங்கிலி, நகை மதிப்பீட்டாளா் சாமிநாதன் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்: ராகுல்

SCROLL FOR NEXT