பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மலேரியா மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மலேரியா தடுப்புமுறைகள், சுய சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீா், நோய் பரவும் காரணிகள், தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பள்ளி தலைமையாசிரியை சுபத்ரா, ஆசிரியைகள் சத்யா, கலைவாணி, கீதா, உஷாராணி, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.