புதுக்கோட்டை

கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப். 25-ஆம் தேதி பூச்சொரிதல், மே 1-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, கோயிலில், கலை நிகழ்ச்சிகள், சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொங்கல்விழா நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் வீடுகள், கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் கோயிலில் திரண்ட பக்தா்கள் அலகு குத்தி, பால் குடம் எடுத்தும், தீ மிதித்தும் நோ்த்திக்கடனைச் செலுத்தினா். தொடா்ந்து, மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச்செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோா் தேரை வடம்பிடித்து இழுத்தனா். திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT