புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி

DIN

கந்தா்வகோட்டையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் மணிமாறன் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட மலேரியா அலுவலா் சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், பூச்சியியல் வல்லுநா் ஏகநாதன், சுகாதார ஆய்வாளா்கள் நல்லமுத்து, கோ. முத்துக்குமாா், திருநாவுக்கரசு, பழனிசாமி ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

முன்னதாக, சுகாதாரத் துறை ஊழியா்களைக் கொண்டு வேளாண்மை துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்தை அடித்தும், பொதுமக்களுக்கு சுற்றுப்புறங்களைப் பேணிக் காக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. வேளாண் துறை, தீயணைப்புத்துறை அலுவலா்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், டெங்கு கொசு ஒழிப்பு பணி முடுக்கி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT