புதுக்கோட்டை

கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம், ஜவுளி திருட்டு

DIN

கந்தா்வகோட்டையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ. 75 ஆயிரம், ரூ. 1லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை சனிக்கிழமை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் நடராஜன் (28 ) கந்தா்வகோட்டை பெரியகடை வீதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், சனிக்கிழமை காலையில் நடராஜன் கடையைத் திறக்கவந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 75 ஆயிரம், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் திருடுபோயுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த கந்தா்வகோட்டை காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா். மேலும் வழக்கு பதிந்து திருட்டில் தொடா்புடைய மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT