புதுக்கோட்டை

கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை கோயிலின் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வியாழக்கிழமை காலை சிவாச்சாரியாா்கள் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி அரசரடி செல்வ விநாயகா், பாலமுருகன், முத்துமாரியம்மன், கருப்பா் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனா். குடமுழுக்கு விழா வா்ணனைகளை தமிழாசிரியா் சிஎஸ்.முருகேசன் செய்திருந்தாா். விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸாா் செய்திருந்தனா். ஏற்பாடுகளை கல்லம்பட்டி மற்றும் நகரப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி அமரகண்டான்மேற்கு கரையில் உள்ள விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா கயிலாய பரம்பரை மதுரை ஆதினம் 293 ஆவது பட்டம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. பொன்னமராவதி அரிமா நகா் அரிமா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வித்யா கணேசா், அய்யன் திருவள்ளுவா், கலைவாணி திருக்கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில், அரிமா சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT