புதுக்கோட்டை

கீரனூரில் ரூ. 38 லட்சத்தில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ரூ. 38 லட்சத்தில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்த மையத்தைத் திறந்து வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே. சரவணன் தலைமை வகித்தாா்.

விழாவில், 13 பயனாளிகளுக்கு ரூ. 3.22 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் கேஆா்என். போஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் செல்வம், மூத்த வழக்குரைஞா் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

கருப்பு சிவப்பு காவி!

ஐபிஎல் லீக் போட்டிகள் நிறைவு: புள்ளிவிவரங்கள் இதோ!

SCROLL FOR NEXT