புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

கந்தர்வகோட்டை அருகே பேருந்து வசதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

DIN

கந்தர்வகோட்டை அருகே பேருந்து வசதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், தெத்து வாசல்பட்டி கிராமம் தஞ்சை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து கந்தர்வகோட்டை புதுக்கோட்டை செல்லும் பேருந்துகளும் சரிவர நிறுத்துவது இல்லை என்றும், இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வந்தனர். 


இதுகுறித்து எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறையினர் என பல தரப்பிடம் புகார் அளித்தும் பலமுறை போராட்டம் செய்தும் இதுவரை இந்த பிரச்னையும் தீராததால் திங்கள்கிழமை காலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தஞ்சை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தெத்துவாசல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், ஊர் பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை செய்து சரியான நேரத்திற்கு பேருந்து நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT