கந்தர்வகோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் பலியான பள்ளி மாணவன் ராம்குமார். 
புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மாணவன் பலி

கந்தர்வகோட்டை அருகே வீட்டின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் திங்கட்கிழமை பலியானார். 

DIN

கந்தர்வகோட்டை அருகே வீட்டின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் திங்கட்கிழமை பலியானார். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கோமாபுரம் கிராமம், அண்ணாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் இந்திரா காந்தி தம்பதியினரின் மகன் ராம்குமார் (15), இவர் தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், திங்கட்கிழமை காலை பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் பின்புறம் சென்றபோது மேலே சென்ற மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக ராம்குமார் மேல் அறுந்து விழுந்தது. 

இதில் அலறி துடித்த கீழே விழுந்த ராம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்து மாணவன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இந்த மின்விபத்து குறித்து ராம்குமாரின் தாயார் இந்திரா காந்தி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் ராம்குமாரின் உடலை உடற்கூராய்விற்க்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT