புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘காபி வித் கலெக்டா்’ நிகழ்ச்சியில் மாணவா்களுடன் உரையாடிய ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா. 
புதுக்கோட்டை

‘காபி வித் கலெக்டா்’: அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

‘காபி வித் கலெக்டா்’ என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவா்களைச் சந்தித்து உரையாடும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


புதுக்கோட்டை: ‘காபி வித் கலெக்டா்’ என்ற பெயரில் அரசுப் பள்ளி மாணவா்களைச் சந்தித்து உரையாடும் கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இரண்டாவது கூட்டமாக இந்தக் கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னோடி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

இலுப்பூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாநில அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாணவா் நலத் திட்டங்கள் குறித்து மாணவா்களுடன் ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கலந்துரையாடினாா். மேலும், மாணவா்களின் சந்தேகங்களுக்கும் அவா் பதிலளித்தாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, முதன்மைக் கல்வி அலுவலா் மா. மஞ்சுளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT