புதுக்கோட்டை

500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

புதுக்கோட்டை அருகே பொதுவிநியோகத் திட்டத்தின் 500 கிலோ அரிசியைக் கடத்தியவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீஸாா், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலிருந்து ராங்கியம் செல்லும் முள்ளிப்பட்டி பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியே வந்த டாடா சுமோ காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த காரைக்குடி மஜித்தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மு.துராமலிங்கம் (51) என்பவரைக் கைது செய்த போலீஸாா், கடத்தல் அரிசியையும் காரையும் பறிமுதல் செய்தனா்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT