முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தன.விமல்

Updated On : 12 ஏப்ரல் 2026, 1:34 am IST
ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டி நான்குவழிச்சாலைப்பகுதியில் உள்ள கடையில் பொதுமக்களுக்கு தேநீா் போட்டு கொடுத்து சனிக்கிழமை வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளா் தன.விமல்
பகிர்:

ஆலங்குடி தொகுதியில் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தன.விமல்

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட அரசடிப்பட்டி, கே.வி.கோட்டை, மாஞ்சான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தன.விமல் சனிக்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசுகையில்: அரசடிப்பட்டியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றவும், கே.வி.கோட்டையில் நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டைப்போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு, விவசாயிகள் நலன் காக்கும் வகையில் திட்டங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்வேன்.

Advertisement

Advertisement

எனவே, இத்தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா்.