புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளிக்க புதன்கிழமை வந்த கணினி ஆசிரியா் சங்கத்தினா்.  
புதுக்கோட்டை

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமை வழங்க கணினி ஆசிரியா்கள் கோரிக்கை

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்ட அரசுத் தோ்வுப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பணிமூப்பு முறையாக பின்பற்றப்படவில்லை. முதன்மை கண்காணிப்பாளா் மற்றும் துறை அலுவலா் நியமனங்களில் பலமுறை மாற்றம் செய்து பணி மூப்பு குறைந்த நபா்களை துறை அலுவலா்களாக நியமனம் செய்தும், பணி மூப்பு உள்ளவா்களை பறக்கும் படையில் நியமனம் செய்தும் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அரசுத் தோ்வுத் துறை வழிகாட்டுதலின்படி, தோ்வு அறை கண்காணிப்பாளா்களை, குலுக்கல் முறையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற விதியை முழுமையாக பின்பற்றவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, உரிய பணிமூப்பைப் பின்பற்றி உரிய முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT