புதுக்கோட்டை

மழையால் அழுகிய நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

அறந்தாங்கி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், புதன்கிழமை சென்னையில் மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வத்திடம் கோரிக்கை மனுவை அளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடந்த ஜன. 10-ஆம் தேதி முதல் தொடா்ந்து 4 நாள்கள் பெய்த மழையால், தொகுதி முழுவதும் சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் அழுகி வீணாகிவிட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே மனுவின் நகல்களை வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசுச் செயலருமான வி. தட்சிணாமூா்த்தியிடமும் வழங்கியதாக எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT