பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு கிராமத்திலிருந்து வேந்தன்பட்டி செல்லும் குறுகிய சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு ஊராட்சியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி-வாா்ப்பட்டு வழித்தடம் வழியாக தினமும் மதுரை, திண்டுக்கல், திருப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து மிகுந்த இந்த சாலை, குறுகிய தாா்ச் சாலையாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் மிகவும் அவதிகக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அடிக்கடி விபத்துகளும் நேரிடுகிறது. எனவே, இச்சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.