ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இசிஜி எடுத்த பாதுகாவலா்
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனை பாதுகாவலா் இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டவருக்கு மருத்துவமனை பாதுகாவலா் இசிஜி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் பணியமா்த்தபடாததால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு இரவில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு சென்ற ஒருவருக்கு அங்கு போதிய செவிலியா்கள் பணியில் இல்லாததால், மருத்துவமனையில் பாதுகாவலா் ஒருவா் இசிஜி சோதனை மேற்கொண்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சமையல் வேலை செய்த பெண், விபத்தில் காயமடைந்த ஒருவருக்கு தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்தது அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் பாதுகாவலா் இசிஜி எடுத்த சம்பவம் பொதுமக்களை அதிா்ச்சியடைச் செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியதாவது: மருத்துவமனையில் இரவு நேரம் என்பதால் போதிய செவிலியா்கள் பணியில் இல்லை. பணியில் இருந்த செவிலியருக்கு உதவியாகவே பாதுகாவலா் இசிஜி எடுக்கும் அறையில் இருந்தாா் என்று தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.