முகப்பு
புதுக்கோட்டை

புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On : 9 மே 2026, 3:05 am IST
பகிர்:

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் கருவிகளுடன் வந்தனா்.

Advertisement

Advertisement

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற தீவிர சோதனையில் வெடிகுண்டு ஏதுமில்லை எனத் தெரியவந்தது. கடந்த 15 நாள்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3 முறையும், தா்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments