முகப்பு
தஞ்சாவூர்

கிளை நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்க லியுறுத்தல்பட்டுக்கோட்டை

தற்போது பல்வேறு பதிப்பகத்தினரால் ஆயிரக்கணக்கில் புதிதாக வெளியிடப்படும் நல்ல புத்தகங்களை பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 13 மே 2013, 1:48 am IST
பகிர்:

ற்போது பல்வேறு பதிப்பகத்தினரால் ஆயிரக்கணக்கில் புதிதாக வெளியிடப்படும் நல்ல புத்தகங்களை பட்டுக்கோட்டை கிளை நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டையில் கவிஞர் கல்யாணசுந்தரம் சிலை அருகில் பழுதடைந்த நிலையிலுள்ள அஞ்சல் பெட்டியை அகற்றி விட்டு, புதிய அஞ்சல் பெட்டி வைக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் கண. எழில் தலைமை வகித்தார்.செயலர் முருக. சரவணன், இணைச் செயலர் மோரீஸ் அண்ணாதுரை, பொருளாளர் கவிஞர் ஆம்பல் காமராஜ், மருத்துவர்கள் சம்பத்குமார், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.