தந்தை உள்பட இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தந்தை உள்பட இருவரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தந்தை உள்பட இருவரை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலையில் உள்ள சாலைகாரத் தெருவைச் சேர்ந்தவர் பால்சாமி (55). இவருக்கும், இவரது மகன் செல்வத்துக்கும் (38) இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடும்பப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம்.
இதில் பால்சாமியையும், சித்தி ரோசியையும் (40) செல்வம் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.
Advertisement
Advertisement