நிவாரணம் வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்
வறட்சியின் காரணமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
வறட்சியின் காரணமாக, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனிடம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி கி. வரதராசன் அளித்த மனு: காவிரி நீர் போதிய அளவுக்குக் கிடைக்காததாலும், பருவமழை பொய்த்துவிட்டதாலும் டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, விவசாயம் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதலாக நிவாரணம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்றுத் தர வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement