தஞ்சாவூர்

மணல் கடத்தல்: 9 பேர் கைது

DIN

பாபநாசம் வட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 9 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அம்மாபேட்டை அருகேயுள்ள தீபாம்பாள்புரம் பகுதியில் அம்மாபேட்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 7 மாட்டு வண்டிகளை நிறுத்தி
சோதனையிட்டதில், வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாட்டுவண்டித் தொழிலாளர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, கணபதி அக்ரஹாரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கபிஸ்தலம் போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த
லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநரைக் கைது செய்தனர், லாரியைப் பறிமுதல் செய்தனர். மேலும், பட்டுக்குடி
கொள்ளிடத்தில் மணல் அள்ளப்பட்டு வந்த லாரியை நிறுத்தினர். அப்போது, அதை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பியோடி விட்டதையடுத்து, லாரியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். மெலட்டூர் அருகே
கொத்தங்குடி வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரனைக் கைது செய்தனர். ஆட்டோவைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT