தஞ்சாவூர்

ஆதரவற்ற சிறாருக்கு அறுசுவை உணவு

DIN

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அதிராம்பட்டினம் அருகேயுள்ள  ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலர் ஏனாதி பா. ராமநாதன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் இராம. குணசேகரன், பொருளாளர் கோடி முதலி, துணைச் செயலர் அன்சர்கான், மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அறுசுவை உணவளித்த திமுகவினருக்கு காப்பகப் பொறுப்பாளர் ஆர்.எஸ். மணிவண்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT