தஞ்சாவூர்

புயல் பாதிப்புகளை பிரதமர் பார்வையிட கோரி ஆர்ப்பாட்டம்

DIN


கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் புரட்சி கண்ணகி பேரவையினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிய ரூ. 15 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரவையின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் நெல்லை மணி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், விஜயகுமார், வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT