தஞ்சாவூர்

திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா

DIN

தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். விழாவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து 150 பேருக்கு பொங்கல் பரிசு மற்றும் 150 பெண்களுக்கு புடவைகள் வழங்கினார்.
விழாவுக்கு திருவிடைமருதூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கோ. ரவிச்சந்திரன், நகர கழக செயலாளர் சு.ப. தமிழழகன், ஒன்றிய கழக செயலாளர்கள் டி. கணேசன், இரா. அசோக்குமார், கோ.க. அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் குருசாமி, தங்க.தியாகராஜன், எஸ்.முருகன், இளைஞரணி நிர்வாகிகள் ஏ.ஜி. பிரவின்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தஞ்சாவூரில்: தஞ்சாவூர் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அசோக்ராணி காமராஜ் வரவேற்றார். இதில், ஜாதி, சமய வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன், திருவோணம் ஒன்றியச் செயலாளர் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாலை 6.30 மணி: பாஜக 69, காங்கிரஸ் 32 தொகுதிகளில் வெற்றி

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்: ராகுல்

மோடி ராஜிநாமா செய்ய வேண்டும்: மம்தா

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

SCROLL FOR NEXT