தஞ்சாவூர்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

DIN

தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. 
இதைத் தொடர்ந்து,  மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.  வெள்ளிக்கிழமை (நவ.9) மான் வாகனத்திலும், சனிக்கிழமை பூத வாகனத்திலும், 11-ம் தேதி யானை வாகனத்திலும், 12-ம் தேதி ரிஷப வாகனத்திலும் புறப்பாடு நடைபெறவுள்ளது. நவ. 13-ம் தேதி மாலை ஆடுமயில் வாகனத்தில் புறப்பாடும், பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர், நவ. 14-ம் தேதி காலை திருக்கல்யாணமும், மாலை முத்துப்பல்லக்கும், 15-ம் தேதி குதிரை வாகனப் புறப்பாடும், 16-ம் தேதி திருத்தேரோட்டமும், 18-ம் தேதி காலை விடையாற்றி, மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும், கும்பகோணம் அருகே திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காலை யாக பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நவ. 12-ம் தேதி வரை காலை, மாலையில் சுவாமி புறப்பாடும், 13-ம் தேதி குதிரை வாகனத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி புறப்பாடும், சூரவாகனம் புறப்பாடும் நடைபெறும். பிற்பகலில் ஸ்ரீகிரிகுஜாம்பிகை சன்னதிக்கு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் மண்டகபடிக்கு புறப்பாடும், மாலை 6 மணியளவில் மயில் வாகனத்தில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியும், சூரவாகனமும், நவவீரபாகு வேடதாரிகளுடன் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு புறப்பாடும், இதைத்தொடர்ந்து திருநாகேஸ்வரம் தெற்கு வீதியில் சூரசம்ஹார விழாவும் நடைபெறும். 14-ம்  மாலை 6 மணியளவில் கத்திகழுவுதல் மண்டகப்படியும், 15- ம் தேதி மாலை 6 மணியளவில் திருக்கல்யாணமும் தொடர்ந்து வீதியுலாவும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT