தஞ்சாவூர்

பட்டாசு விற்பனைக்கான  உரிமம் பெற செப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் செப். 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
சட்டப்பேரவையில் 2018 - 19 ஆண்டுக்கான வருவாய்த் துறை மானிய கோரிக்கையின்போது 24 சேவைகள் இணையவழி மூலம் வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக வெடிபொருள் சில்லறை விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் கணினி இணையவழி மூலமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சில்லறை விற்பனை செய்வதற்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கு வெடிபொருள் விதிகள் 2008-படி உரிய ஆவணங்களுடன் செப். 28-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அக். 20-ம் தேதிக்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும். செப். 28-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT