தஞ்சாவூர்

பூதலூரில்  அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் ஒத்திவைப்பு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நூறு நாள் வேலை திட்ட முறைகேட்டை தடுத்து நிறுத்தி,  அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பழைய ஆற்காடு ஆதிதிராவிடர் தெருவுக்குச் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். பழைய ஆற்காடு கிராமத்தில் சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். 
நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள் வழங்க வேண்டும். நியாய விலை கடைக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி முன்பு மழை நீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்கு நிரந்தரமாக எழுத்தரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பழைய ஆற்காடு கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில், பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இளங்கோ, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரெகுநாதன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் போராட்டக் குழுப் பிரதிநிதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வெ. ஜீவக்குமார், ஒன்றியச் செயலர் காந்தி, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கலைச்செல்வி, வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி ஸ்ரீதர், கிளைச் செயலர் அறிவுறுவோன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இக்கூட்டத்தில், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT