தஞ்சாவூர்

பேராவூரணியில் பசுமை சோலை திட்டம் தொடக்க விழா 

DIN

பேராவூரணி தோழமை சமூக சேவை மையம் சார்பில் நீரை நிலத்தில் தேடாமல், வானத்திலிருந்து வரவேற்போம் என்ற முழக்கத்தோடு பசுமை சோலை திட்டம் தொடக்க விழா பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். பேராவூரணி அரசு  ஆண்கள்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் க.சற்குணம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
 மழை வளம் பெருக வேண்டி  அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் நோக்கத்தை விளக்கி தோழமை சமூக சேவை மைய  ஒருங்கிணைப்பாளர் மருத. உதயகுமார் பேசினார். நிகழ்ச்சியில்  திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் ஆறு . நீலகண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஜெயபாலன், கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொருளாளர் வேலு. கார்த்திகேயன், நிமல் ராகவன், தோழமை சமூக சேவை மைய உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்   கலந்து கொண்டனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த.பழனிவேல் வரவேற்றார். தோழமை சமூக சேவை மைய பொறுப்பாளர் விவேக் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT