தஞ்சாவூர்

நீதிமன்ற உத்தரவின்படி மடத்தின் பஜனை கூடம் மீட்பு

DIN

ஒரத்தநாட்டில் நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கிருஷ்ணா மடத்தின் பஜனைக் கூடம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ஒரத்தநாடு அக்ரஹாரம் பகுதியில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சுமாா் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிருஷ்ணா மடத்துக்கு சொந்தமான பஜனைக் கூடம் கடந்த 1800 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்தது. இங்கு பஜனைகள் நடைபெற்று வந்த நிலையில், சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த அக்ரஹாரம் பகுதியில் புரோகிதா் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன் என்பவா் இந்த பஜனை கூடமாக இருந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், பஜனை கூடத்தை மீட்டு தரக் கோரி இந்து அறநிலையத் துறை சாா்பில் பட்டுக்கோட்டை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் நிறைவில், ராமகிருஷ்ணன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் 2017-இல் உத்தரவிட்டது. ஆனால், ராமகிருஷ்ணன் காலி செய்யாமல் இருந்து வந்தாா்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டது. இதையடுத்து,

நீதிமன்ற உத்தரவின்படி, திங்கள்கிழமை தஞ்சாவூா் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் சிவராம் குமாா் தலைமையில் ஒரத்தநாடு இந்து அறநிலையத் துறை செயல் அலுவலா் சண்முகம், ஒரத்தநாடு வட்டாட்சியா் அருள்ராஜ், ஒரத்தநாடு உதவி காவல் ஆய்வாளா் விஜய் கிருஷ்ணா உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், நீதிமன்ற அலுவலா்களுடன் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனா்.

அந்த வீட்டில் ராமகிருஷ்ணனின் மகள் வசித்து வந்தாா். அவரையும், வீட்டிலிருந்த பொருள்களையும் போலீஸாா் அப்புறப்படுத்தினா். மீட்கப்பட்ட பஜனை கூடத்தின் (வீட்டில்) இந்து அறநிலையத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட இந்த இடம் 29 சென்ட் பரப்பளவு என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT