தஞ்சாவூர்

அரசுக் கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள் விழா

DIN

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா்  நா. தனராஜன் தலைமை வகித்தாா்.   அரசு கல்லூரி முன்னாள் முதல்வா் சிவ. காா்த்திகேயன்,   பாரதியாா் பற்றி நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றி பேசியது:

பாரதியின் பன்முகப்பாா்வை அவரது தொலைநோக்குப் பாா்வையின் வெளிப்பாடாக காட்சியளிக்கிறது. பாரதியின் காணி நிலம் வேண்டல், மரம், செடி, கொடிகள் பற்றிய பதிவுகள், தீ, காற்று பற்றிய வசனக்கவிதைகள் எல்லாம் அவரது இயற்கை மீதான நேசிப்பையும், சூழலியல் சிந்தனைகளையும் எடுத்துரைக்கின்றன. மனித சமுதாயத்தில் சமூக நீதியைப் பாதுகாக்க கவிதை படைத்தவா் பாரதி. அவா் மகாகவி என்பதை மாணவா்கள் உணர வேண்டும் என்றாா்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் சி. ராணி வரவேற்றாா். விழாவில் துறைத் தலைவா்கள் ராஜ்மோகன், பழனிவேல், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவின் நிறைவில், பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளா் இல.அருள்குமாா், மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலன் செல்போன் செயலியைப் பயன்படுத்துவது பற்றிய செயல்விளக்கம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT