மக்களவைத் தேர்தல்: வாக்குச்சாவடி வாரியாக பட்டியலை சரிபார்க்க முடிவு
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலை 20 பேர் கொண்ட குழு சரிபார்ப்பது என திமுக முடிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலை 20 பேர் கொண்ட குழு சரிபார்ப்பது என திமுக முடிவு செய்துள்ளது.
கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மேற்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை இளைஞர்களின் எழுச்சி நாளாகக் கொண்டாடுவது, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவது என்பனஉள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர் பாஸ்கர், பொருளாளர் ஸ்ரீகண்டன்,நிர்வாகி முத்துசெல்வன் முன்னிலை வகித்தனர்.
திமுக மாவட்ட செயலர் கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியச் செயலர் அசோக்குமார் வரவேற்றார்.
பேரூர் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், சாகுல்அமீது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.