தஞ்சாவூர்

ஜி.ஆர்.மூப்பனார் உடல் தகனம்: மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

DIN

தஞ்சாவூர் மாவட்டம், சுந்தரபெருமாள்கோவிலில் மறைந்த ஜி.ஆர்.மூப்பனார் உடல் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். 
பாபநாசம் அருகேயுள்ள சுந்தரபெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. ரெங்கசாமி மூப்பனார். 
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த இவர் செவ்வாய்க்கிழமை காலமானார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான சுந்தரபெருமாள்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு,  புதன்கிழமை பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. 
மு.க. ஸ்டாலின் அஞ்சலி: முன்னதாக,  மறைந்த ஜி.ஆர். மூப்பனார் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.  அவருடன் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.அன்பில் மகேஷ் பொய்யாமொழி,திருவாரூர் மாவட்ட செயலாளரும்,  திருவாரூர்  சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி  திமுக வேட்பாளர் செ. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி. செழியன்,  காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர்கள் து. கிருஷ்ணசாமி வாண்டையார்,  டி.ஆர்.லோகநாதன், மாநில அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன்,  இரா. துரைக்கண்ணு, முன்னாள் எம்எல்ஏ. ராம. ராமநாதன், பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் கே. ரெங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் கௌதமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட  செயலாளர் தமிழினி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், 
பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு மறைந்த ஜி.ஆர்.மூப்பனார் உடலுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT